சென்னை: தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படஉ ள்ளது. இந்த விரிவாக்கத்தை வரும் 26தேதி (ஆகஸ்டு 26, 2025) முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கி வைக்கிறார். இதன்மூலம், மேலும், 3.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், முதன்முதலாக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு 15ந்தேதி அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கிவைத்தார். இந்த திட்டதுக்கு பெரு வரவேற்பு கிட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து பல மாநிலங்களிலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கிராமப்புற பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெற்ற தனியார் பள்ளிகளிலும் கொண்டு வரப்பட்டது. கடந்த ஆண்டு ஜுலை 15ந்தேதி அன்று காமராசரின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று 14.3.2025 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் 26.8.2025 அன்று தொடங்கிவைக்க உள்ளார். இத்திட்டத்தின் வாயிலாக 3.05 லட்சம் மாணவ மாணவியர்கள் தினசரி பயன்பெற உள்ளார்கள்.