மாதிரிப் புகைப்படம்

தாமோ, மத்தியப் பிரதேசம்

த்தியப் பிரதேசம் தாமோ மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப் பள்ளியில் மாணவர்களுக்கான மதிய உணவு கழிப்பறையில் தயாரிக்கப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் உள்ளது முடா என்னும்கிராமம்.   இந்த கிராமத்தில் ஒரு ஆரம்பப் பள்ளியும் நடுநிலைப் பள்ளியும் ஒரே வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.   சமீபத்தில் இரு பள்ளிகளுக்கும் தனித் தனியே கட்டிடம் கட்டித் தரபட்டுள்ளது.   அதில் ஆரம்பப் பள்ளிக்கு மட்டுமே சமையல் அறை உள்ளதால் அந்தப் பள்ளிக்கு மதிய உணவு அங்கே சமைக்கப் படுகிறது.

இங்குள்ள மகளிர் சுய உதவிக் குழு ஒன்று இந்த மாணவர்களுக்கான மதிய உணவை சமைத்து வழங்குகிறது.   அந்தக் குழுவை சார்ந்த ஷகிலா என்னும் சமையல் பெண்மணி சமைக்க இடம் கேட்டுள்ளார்.  அதற்கு நடுநிலைப் பள்ளியின் முதல்வர் அந்தப் பள்ளியின் கழிப்பறையில் சமைக்கச் சொல்லி இருக்கிறார்.

விரைவில் சமையல் அறை கட்டித் தரப்படும் என்பதை நம்பி அங்கு ஷகிலா சமைக்க ஆரம்பித்துள்ளார்.    ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் சமையல் அறை கட்டப்படாததால் இன்னும் கழிப்பறையிலேயே சமையல் நடைபெற்று வருகிறது.  ஷகிலா இது குறித்து தாம் புகார் அளித்ததாகவும் ஆனால் யாரும் அதை கவனிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பள்ளி முதல்வர் பிரிஜேஷ் படேல், “இந்த கட்டிடங்கள் இரண்டும் திறந்து வைக்கப்பட்ட போது நடுநிலைப் பள்ளிகான சமையல் அறை ஒப்பந்த தாரரால் கட்டி முடிக்கப்படவில்லை.   எனவே நான் அப்போதைக்கு கழிப்பறையில் சமையல் செய்யச் சொன்னது உண்மைதான்.   ஆனால் ஒப்பந்த தாரர் இதுவரை சமையல் அறை கட்டித்தராமல் இழுக்கடித்து வருவதால் கழிப்பறையிலேயே சமையல் தொடர்கிறது”  என கூறி உள்ளார்.