டில்லி
ஓடும் பஸ்ஸில் பள்ளி மாணவர்கள் இளைஞரை கத்தியால் குத்திக் கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர்.
தெற்கு டில்லி பகுதியில் நேற்று மதுரா சாலையில் ஒரு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது பள்ளிச் சீருடை அணிந்த ஆறு சிறுவர்கள் பேருந்தில் ஏறி உளனர். அவர்கள் நீல நிற கால் சட்டையும் வெள்ளை நிற சட்டையும் அணிந்து இருந்தனர். அப்போது பேருந்தில் பயணம் சென்றுக் கொண்டிருந்த ஒரு இளஞர் தன் செல்ஃபோன் காணவில்லை எனக் கத்தி இருக்கிறார். அவர் அருகில் அந்த சிறுவர்கள் மட்டுமே இருந்ததால் அவர்கள் மேல் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த மாணவர்களின் பைகளை சோதனை இட முயன்றுள்ளார். அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே ஒரே களேபரமாக இருந்துள்ளது. அப்போது திடீரென்று ஒரு மாணவன் தன் பையில் இருந்து கத்தியை எடுத்து அந்த இளைஞரின் கழுத்தில் குத்தி விட்டான். இளைஞர் கீழே விழுந்து விட்டார். அப்போது போக்குவரத்து நெரிசலில் பேருந்து இருந்ததால் மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடி விட்டனர்.
விழுந்த வாலிபர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்து விட்டார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மாணவர்களின் சீருடை, மற்றும் அவர்கள் ஏறிய பஸ் நிறுத்தம் ஆகியவைகள் பற்றி சரியாகத் தெரிந்தும் இன்னிம் விசாரணையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர் யார் என்னும் விவரமும் இன்னும் அறியப்படவில்லை.