பிபிஇ கவச உடைகளை உருவாக்கியது முதல் மருத்துவமனை நிதி திரட்டுவது வரை, இங்கிலாந்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அரசுடன் கைகோர்த்து நிற்கின்றன.
இங்கிலாந்தில், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மூடியதில் இருந்து முதல் நிலை ரத்து செய்யப்பட்டது வரை, இளைஞர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும், இங்கிலாந்து முழுவதும் பல்வேறு ஊழியர்களும் மாணவர்களும் தங்கள் உள்ளூர் சமூகம் மற்றும் தேசிய சுகாதார நிறுவனத்திற்கு பல வழிகளில் ஆதரவளிக்க முயற்சித்து வருகின்றனர். உதாரணமாக, யார்க்ஷயரில் உள்ள ஹாரோகேட் இலக்கணப் பள்ளி, அதன் வடிவமைப்புத் துறையை பிபிஇ கவச உடைகள் தயாரிக்க மறு உருவாக்கம் செய்துள்ளது. மேலும் இதுவரை 1,000 க்கும் மேற்பட்ட கவச முகக் கண்ணாடியையும் உருவாக்கியுள்ளது. அதன் தலைமை ஆசிரியரான நீல் ரெண்டன் கூறும்போது, “எங்களிடம் வேலையிழந்த அல்லது ஓய்வு நேரம் கொண்ட பல பெற்றோர்கள் இருந்தார்கள். அவர்களில் பலர் பொறியாளர்கள். அவர்கள் எங்களிடம் ஏதேனும் உதவி தேவையா என கேட்டபோது , நாங்கள் ஏற்கனவே பல தன்னர்வலர்களைக் கொண்டிருந்தோம். பொது சேவையில் நம்பிக்கை கொண்ட எங்கள் ஆசிரியர்களிடமிருந்து ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன்” என்றார். அவர்கள் உருவாக்கிய முகக் கவசக் கண்ணாடிகளை, உள்ளூர் மருத்துவமனைகள், துணை மருத்துவமனைகள் மற்றும் ஜி.பி. அறுவை சிகிச்சை மையங்கள், மற்றும் முன்னணி வரிசையில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டில் பள்ளியை விட்டு வெளியேறிய ஜாக் ஷெரிப், மிட்லாண்ட்ஸில் உள்ள ஒரு கொரோனா வைரஸ் வார்டில் ஜூனியர் மருத்துவராக உள்ளார். கடந்த வாரம் இவர்களிடம் இருந்து ஆறு கண்ணாடிகளைப் பெற்றுக் கொண்டார். அந்தக் கண்ணாடிகளில், பள்ளியின் சின்னம், என்ஹெச்எஸ் சின்னம் மற்றும் “நாங்கள் ஒன்றாக நிற்கிறோம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. “நீங்கள் ஏற்கனவே இருந்த பழைய இடத்தில் இருந்து உதவி கிடைப்பதும், அவர்களுடன் தொடர்பில் இருப்பதும், அவர்கள் நம்மைப்பற்றி இன்னும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிவதும் மிக்க மகிழ்ச்சிகரமானது” என்றார். எனது கடந்த காலத்தின் லோகோவின் கீழ் இப்போதும் இருப்பது ஒரு குண்டு வெடிப்பின் தாக்கத்தைப் போன்றதொரு மகிழ்வைத் தருகிறது. நான் பள்ளியில் பயன்படுத்திய அதே லேசர் வெட்டியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கவசக் கண்ணாடியைப் பயன்படுத்துவது நன்றாக இருந்தது” என்கிறார். பள்ளிகள் தங்களது முன்னால் மாணவர்களுக்கு உதவுவது என்பது வழக்கமானது என்றாலும் தற்போதைய நெருக்கடி காலத்தில் இதை ஒருங்கிணைப்பது மிகவும் சவாலாக உள்ளது.
லீட்ஸில் உள்ள மீடோஃபீல்ட் தொடக்கப்பள்ளியில், கிட்டத்தட்ட பாதி மாணவர்கள் இலவச பள்ளி உணவுக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் ஆவர். இந்த பள்ளி ஒரு குடும்பத்திற்கு ஈஸ்டர் விடுமுறைக்கு உதவும் வகையில் இரண்டு வாரங்களுக்கு போதுமான அளவு மளிகைப் பொருட்களை மொத்தமாக 145 குடும்பங்களுக்கு வழங்கியுள்ளது. மேலும் தினமும் இலவச உணவும். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஹெலன் ஸ்டவுட் கூறும் பொது, “எங்களுடையப் பள்ளிக்கு இறைச்சி வழங்கும் கடைக்காரர்கள் எங்களுக்கு உலர்ந்த இறைச்சியையும், உள்ளூர் மளிகைக்கடைகள் எங்களுக்கு தேவையான சில பொருட்களையும் வழங்க முன்வந்துள்ளன. மக்கள் உண்மையிலேயே கனிவானவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருகிறார்கள். நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என்பதை அறிவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், ஒரு தொடக்கப்பள்ளியினை நிர்வாகம் செய்வதோடு, சில சமூகப் பணிகளையும் நிர்வகிப்பது உண்மையிலேயே வித்தியாசமான உணர்வைத் தருகிறது” என்றார். மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவுவது மட்டுமின்றி, அவர்களைச் சுற்றியுள்ள முக்கிய சுகாதார பணியாளர் போன்ற முக்கிய தொழிலாளர்களைக் கொண்டாடுவதற்கும் உதவுவதற்கும் கூட முயற்சி எடுத்து வருகின்றனர்.
டெர்ரியில் உள்ள தோர்ன்ஹில் கல்லூரியில், பல மாணவர்கள் அவர்களின் குடும்ப அங்கத்தினர்கள் தேசிய சுகாதார நிறுவனத்தில் பணிபுரிவதால், இந்த தொற்று நோயைப் பற்றிய அச்சம் மற்றும் பதட்டத்தினை வெளிப்படுத்தினர். எனவே, இதற்கு ஏதேனும் பயனுள்ளதை செய்யும் விதமாக, என்ஹெச்எஸ் ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டும் விதமான பதிவுககைப் பகிர்ந்துக் கொள்ளச் சொல்லி கேட்டுக் கொண்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக அவர்கள் பெரும் வரவேற்பை பெற்றனர். மேலும் இந்த பாராட்டுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு உதவும் வகையில், ஒரு நிதித் திரட்டும் திட்டத்தினையும் பள்ளி உருவாக்கியது. அவர்கள் குறித்துவைத்த £ 500 இலக்கு – இது இரண்டு நாட்களில் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. “இந்த திட்டம் தானே உயிர்பெற்று வளர்ந்து வருகிறது” என்றார் இக்கல்லூரியின் துணை முதல்வர் ஆர்லா டொன்னெல்லி. “NHS தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நபர்களுடன் நாங்கள் ஒன்றிணைந்து இருக்கிறோம். மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒவ்வொருவரும், அவர்களின் பணியை பெருமையுடன் பாராட்டுகிறார்கள். முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், அம்மாக்கள், பாட்டி மற்றும் அத்தைகள் என அனைவரும் இதைச் செய்கிறார்கள். “எங்கள் பள்ளியின் தாழ்வாரங்கள் அமைதியாக இருக்கின்றன. வகுப்பறைகள் காலியாக உள்ளன. ஆனால், அது சரியாக உணரவில்லை. இது நாங்கள் செய்ய முடிந்த ஒரு சிறிய பணி மட்டுமே. ஆனால் இது முன்னின்று பணிபுரிபவர்களுக்கு அதீத நன்றியுணர்வை தந்திருக்கிறது “ என்றார்.
இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவளித்து வரும் முன்னாள் மற்றும் இந்நாள் மருத்துவ மாணவர்கள் அவர்களின் குழந்தைகளை கவனித்துக் கொள்கிறார்கள். மளிகை சாமான்கள் வாங்க உதவுகிறார்கள், வேலைக்கு செல்ல வண்டி ஓட்டுகிறார்கள். இது தேசிய சுகாதார ஆதரவாளர்கள் அமைப்பின் செயல்பாடுகளில் ஒரு பகுதியாகும். இந்த அமைப்பு தினமும் 50 முதல் 100 கோரிக்கைகளை பெறுகிறது. நான்காம் ஆண்டு மருத்துவ மாணவர் சைஃப் கான் தான் படித்த மான்செஸ்டரில் இதற்கென ஒரு கிளையை திறந்தார். தற்போது தினமும் சுமார் 25 குடும்பங்களுக்கு உதவுகிறார். அவர் கூறினார்: “எனது பாடங்கள் இடைநிறுத்தப்பட்டதால், எங்களுக்கு போதுமான நேரம் கிடைத்தது. இதனால் எங்களுடைய NHS சகாக்களுக்கு உதவ முடியும் என்று நினைத்தேன். எங்கள் ஆசிரியர்கள் மற்றும் பலரும் வழிகாட்டிகளாக உள்ளனர். நான் எங்கள் மருத்துவ சமூகத்திற்கு பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தேன். மூன்று நாட்களுக்குள் மருத்துவ மாணவர்களிடமிருந்து மட்டுமல்லாமல், செவிலியர்கள் மற்றும் பேச்சு சிகிச்சையாளர்கள் போன்ற பிற சுகாதார மாணவர்களிடமிருந்தும் தன்னார்வலர்களாக 400 பதில்களைப் பெற்றேன். ” என்றார்.
பல்வேறு மருத்துவ மாணவர்கள் முன்கூட்டியே NHS இல் சேர்ந்து, மருத்துவமனைகளில் ஊதியம் கொண்ட மற்றும் இலவச சேவை என கலவையான பணிகளை முன்னேடுக்கிறனர். இது சிரமமான வேலையையும் எளிதாக்கியது. “நான் ஐந்து ஆண்டுகளாக மருத்துவப் பள்ளியில் படித்து வருகிறேன், கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் முற்றிலும் மருத்துவ அமைப்பில் இருந்தேன், எனவே எனக்கு மருத்துவமனைகள் தெரிந்திருக்கிறது” என்று இறுதி ஆண்டு மருத்துவ மாணவர் ஃபோப் கிரே கூறினார். தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நாளில் பிரிஸ்டலில் உள்ள அவரது உள்ளூர் மருத்துவமனையில் வேலை செய்துக் கொண்டிருந்தார். அனைவரும் முடக்கத்தில் இருக்கும்போது, நாம் சும்மாயிருப்பது சரியில்லை என்று தோன்றியது. மேலும் ஒரு மருத்துவராக, மருத்துவமனைகளில் நாம் தேவைப்படும்போது நாம் அங்கு இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.” என்றார். கிரே, மருத்துவ பயிற்சியில் இருந்துக் கொண்டே, மனநல செவிலியர்கள் முதல் துணை மருத்துவர்கள் வரை பல பயிற்சியாளர்களுடன் சேர்ந்து கற்றுக் கொண்டார். அவர் இப்போது ஒரு தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு நர்சிங் உதவியாளராக பணிபுரிகிறார். அதனுடன் சேர்த்து, இருதய மற்றும் கொரோனா வைரஸ் நோயாளிகளையும் கவனித்து வருகிறார். மருத்துவராக இருந்தும், முதல் முறையாக ஒரு நர்ஸ் வேலையை செய்கிறார். “நகரும் இயந்திரத்தில் பல் சக்கரம் போல போல இது நல்ல உணர்வைத் தருகிடது” என்று கிரே கூறினார். மேலும், “நீங்கள் பல திகில் கதைகளைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் வியாழக்கிழமை மாலை மக்கள் வெளியே கைதட்டுவதை கேட்கும்போது, அது எங்களுக்கு பெருமை சேர்க்கிறது. வெளிப்படையாக கூறுவதானால், அது மதிப்புக்குரியது !!!”.
தமிழில்: லயா