வாஷிங்டன்:
மோசமான காலநிலை காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று இரவு ஸ்பேஸ் எக்ஸின் பால்கான் 9 ராக்கெட் விண்வெளிக்கு செல்லவிருந்தது. இதில் முதல் முறையாக தனியார் விண்கலம் மூலம் இதில் விண்வெளி வீரர்கள் பயணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2011-ம் ஆண்டுக்கு பிறகு நாசா தனது சொந்த ராக்கெட் மூலம் வீரர்களை அனுப்புவதை நிறுத்திக் கொண்டு, ரஷ்யாவின் ராக்கெட் மூலம் அனுப்பி வந்தது. இந்த நிலையில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தங்களது சொந்த மண்ணில் இருந்து ராபர்ட் பெஹன்கென், டக்ளஸ் ஹர்லி ஆகிய இரு மூத்த விண்வெளி வீரர்கள் விண்வெளி பயணமாக இருந்தனர்.

இந்நிலையில், மோசமான காலநிலை காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.