சென்னை: பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்ட சென்னை மாநில கல்லூரி மணாவர் உயிரிந்த நிலையில், சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநலி கல்லூரிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, உயிரிழந்த மாணவர் சுந்தருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மவுன அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் உள்ள  அரசு கல்லூரிகளின் மாணவர்களிடையே அவ்வப்போது மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்ற பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்க இடையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் மாநிலக்கல்லூரியில் படித்து வந்த திருவள்ளுரைச் சேர்ந்த மாணவன் சுந்தர் கடுமையாக தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இது மாநில கல்லூரி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இரு கல்லூரிகள் முன்பும் காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில்,  மாணவர் சுந்தர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கல்லூரியை விட்டு மாணவர்கள் வெளியேற முடியாதவாறு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால், மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை  கலைந்து செல்ல  காவல்துறையினரும், கல்லூரி தரப்பில் கூறிய நிலையில், அவர்கள் வெளியேற மறுத்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் காரணமாக சென்னை மாநில கல்லூரிக்கு இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாநில கல்லூரி மாணவன் உயிரிழப்பு – பதற்றம் – காவல்துறை குவிப்பு…