டில்லி:
தனியார் பயிற்சி மையங்களில் மாணவர்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றனர், இது தவிர்க்கப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வேதனை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமேசாம் தெரிவித்த ஆய்வில் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 95 சதவிகிதம் பேர் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி தனியார் பயிற்சி நிலையங்களை நாடுவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மேல்நிலைக்கல்வி பயிலும் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 95 சதவிகிதம் பேர் தனியார் பயிற்சி மையங்களுக்குச் செல்வதாக தெரிவித்த அமேசாம் ஆய்வை சுட்டிக்காட்டி பேசி வேதனை தெரிவித்தார்.
இதற்கு காரணம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கற்பித்தலில் இருக்கும் குறைபாடுகள் என்றும், இதன் காரணமாகவே தனியார் பயிற்சி மையங்களில் மாணவர்கள் அதிக அளவில் சேர்க்கிறார்கள் என்றும், அங்கு மாணவர்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
மத்திய அமைச்சரின் இந்த பேச்சு ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.