சென்னை; நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பள்ளி மாணவர் தற்கொலை தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அந்த மாணவர் படித்த பள்ளியின் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரகுமார், . இவரது மகன் சபரி கண்ணன் (வயது 15). இவர், வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த பள்ளியில் கடந்த 4-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் சபரி கண்ணன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆசிரியர்கள் அந்த மாணவரை கண்டித்த நிலையில், அந்த மாணவர், கடந்த 7-ந் தேதி வீட்டில் வைத்து பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்.
மாணவர் சபரி பள்ளி வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்த நிலையில், அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், அந்த மாணவனை உடடினயாக மீட்டு, சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் அங்கிருந்துமதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவன் சபரி சிகிச்சை பலனின்றி நேற்று (ஜுலை 17) உயிரிழந்தார்.
இதையடுத்து மாணவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க எடுத்து வரப்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த மாணவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நே வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு மாணவரின் உடல் வந்த வாகனத்துடன் நெல்லை- அம்பை பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவன் தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியதுடன், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியனர். இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 பேருந்துகள் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.