சென்னை: சென்னையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றும்,  அரசு காலிப்பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றதேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையட்டி, வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் படுகிறது. தேர்தலையொட்டி, தீவிர பிரசாரங்களை அரசியல் கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்

சென்னை  அம்பத்தூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சென்னை ராக்கி திரையரங்கம் அருகே திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது  பேசியவர், தான் தொழில்துறை அமைச்சராக இருந்த போது பல்வேறு தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொடங்கினேன் என்றும், ஆனால், ஆட்சி ஆட்சியில்  எந்தவொரு எதொழிற்சாலைகள் எதுவும் தொடங்கவில்லை என குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சிக்கு வந்தால்,  அரசு அலுவலகங்களில் உள்ள மூன்றரை லட்சம் காலி பணியிடங்களில், தமிழக இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.

“எப்போதும் சென்னை என்பது கழகத்தின் கோட்டை. அந்த கோட்டையை கைப்பற்ற வேண்டும். அதற்காக தான் உங்களை நாடி வந்திருக்கிறேன். அதிமுக ஆட்சி ஊழல் செய்து மக்களைச் சுரண்டியது என்று குற்றம் சாட்டியதுடன், இந்த ஆட்சியை அகற்றி  திமுகவை வெற்றி பெறச்செய்யுங்கள் என மக்களின் வேண்டுகோள் விடுத்தார்.

அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகாலம் பின்னால் சென்றுவிட்டோம். கொரோனாவை விட மோசமானவர் எடப்பாடி. நான் தான் விவசாயி என்று எடப்பாடி சொல்லிக்கொள்கிறார். பச்சை துண்டு போட்டு பச்ச துரோகம் செய்யும் எடப்பாடி தான் ஒரு விவசாயி என கூறுகிறார். திமுக ஆட்சியில் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளோம். எடப்பாடிக்கு தெரிந்ததெல்லாம் ஊழல் மட்டும் தான்.. எடப்பாடிக்கு கலெக் ஷன், கரப்ஷன், கமிஷன் இவை மட்டுமே தெரியும்.  இதனை ஒழிக்க வேண்டும் என்றால் வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.