சானிடைசர் + இருமல் மருந்து: குடித்துப் பார்த்த பார்த்த மாணவன் பலி..
ஊரடங்கில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், குடி நோயாளிகள் பாடு திண்டாட்டமாகி விட்டது.
மதுவின் வண்ணத்தில் காணப்படும் திரவங்களை எல்லாம் குடித்து ஆங்காங்கே பலர் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதை அறிவோம்.
போதைக்கு அடிமையான மெத்தப் படித்த மாணவனும் இது போன்ற அமிலம் குடித்துச் செத்துப்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தார்வாட்டில் உள்ள கர்நாடக பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த சுதீப் என்ற மாணவர், அருகேயுள்ள ஹோய்சலா நகரில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருந்தார்.
சரக்கு பிரியர்.
’’சானிடைசரையும், இருமல் மருந்தையும் ’மிக்ஸ்’ செய்து குடித்தால் ‘கிக்’ ஏறும் என்று யாரோ நண்பன், சுதீப்புக்கு ‘டிப்ஸ்’ கொடுத்திருந்தான்.
அப்படியே செய்தார், சுதீப்.
சிறிது நேரத்தில் துடிதுடித்து செத்தே போனார்.
தற்செயலாக அங்கு வந்த வீட்டு உரிமையாளர், வீட்டுக்குள் சுதீப், சடலமாகக் கிடப்பதையும், அருகே சானிடைசர் காலி பாட்டில் மற்றும் இருமல் மருந்து பாட்டில் கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
என்ன நடந்திருக்கும் என்பதை அவர் யூகித்துக் கொண்டார்
போலீசுக்கு அவர், தகவல் கொடுக்க அவர்கள் சுதீப் சடலத்தை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர்.
போதைக்காக சானிடைசர் மற்றும் இருமல் மருந்தை மாணவர் கலந்து அடித்தது, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
முட்டாள்கள் ,யோசிப்பதில்லை.
ஆராய்ச்சி மாணவரே இப்படிச் செய்யலாமா? என ஆதங்கப்படுகிறார்கள், போலீசார்.
– ஏழுமலை வெங்கடேசன்