
நாடு முழுவதும் கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தி, பாடங்களை தொடங்கி உள்ளது. ஆனால், அரசு பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கொரோனா குறைவதைத் தொடர்ந்தே பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். அப்போது மாணவர் சேர்க்கையும் நடத்தப்படும். ஆனால், அந்த ஆண்டு அரசு பள்ளிகளில் இதுவரை மாணவர் சேர்க்கை நடத்தப்படாதது பெற்றோர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்டு 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் சேர்க்கை ஊரடங்கு முடிந்தவுடன் 3.8.2020 முதல் நடைபெறும் என்றும் மாணவ-மாணவிகளுக்கு விண்ணப்ப படிவமும் அன்றே வழங்கப்படும்.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும்.
கொரோனா காலத்தில் எந்த இடத்திலும் கூட்டம் சேரக்கூடாது என்பதை புரிந்து கொண்டு பெற்றோர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel