இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் இன்று அதிகாலை முதல் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சாலைகள் சேதடைந்துள்ளன. அதுபோல அண்டை நாடானா நேபாளத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது..
அருணாச்சல் பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்திய ஆய்வு நிறுவனம் 5.8 ரிக்டர் அளவுகோள் என தெரிவித்து உள்ளது. இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் மையப்புள்ளியான மாநில தலைநகர் இடநகருக்கு தென்மேற்கே 180 கிலோ மீட்டர் தொலைவில் உருவானதாக கூறப்படுகிறது.
இதேபோல் நேபாள நாட்டின் காத்மண்டு பகுதியில் இன்று காலை 6.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு ஆனது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாக வில்லை. ஆனால், சாலைகள் சேதடைந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.