மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கும் அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஒட்டுமொத்த ஓடிடி தளங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஓடிடி மற்றும் டிஜிட்டல் பப்ளிஷிங் நிறுவனங்கள் தங்கள் தளங்களில் பதிவேற்றும் திரைப்படங்கள் மற்றும் கண்டண்ட்களை வன்முறை, வயதுவந்தோர் (Adult),மொழி, பாலினம் அடிப்படையில் 13+, 16+ (வயது வாரியாக) என 5 விதமான வயதினருக்கு ஏற்ப வகைப்படுத்த வேண்டும்.
இதற்கென U (Universal- அனைவருக்குமானது), U/A 7+ (வயதினருக்கானது), U/A(வயதினருக்கானது) 13+, U/A(வயதினருக்கானது) 16+, and A (Adult-வயது வந்தோருக்கானது) என்று 3 வகையான சுய தணிக்கைகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக U/A சான்றிதழுடன் கூடிய 13+ (வயதினருக்கான) திரைப்படங்களை பெற்றோர் மட்டுமே காணக்கூடிய Parental locks முறையில் அமைக்க வேண்டும்.
இனி ஓடிடி இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சரகத்தின் கீழ் வரும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவகேடர் தெரிவித்துள்ளார்.
இவை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓடிடிகளின் இந்த சுய ஒழுங்குக் கட்டுப்பாடுகளை தலைமை தாங்கி மேற்பாரவையிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .