டில்லி

மத்திய அரசு இனி வரவிருக்கும் பண்டிகைகளின் போது கொரோனா கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடெங்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.   அதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.   ஆகவே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.   ஆயினும் ஊரடங்கு தொடர்கிறது.  சமீபத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகைக்குப் பிறகு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

இனி வரும் காலங்கள் பண்டிகை காலங்கள் ஆகும்.   குறிப்பாக நவராத்திரி, ஆயுத பூஜை, மற்றும் தீபாவளி போன்ற கொண்டாட்டங்கள் வர உள்ளன.  இவை எல்லாம் நாடெங்கும் கொண்டாட வாய்ப்புள்ளதால் ஒரே இடத்தில் பலரும் கூட வாய்ப்புள்ளது.  இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.  இதையொட்டி மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,

“நாடெங்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பயன்படுத்த வேண்டும்.  அத்துடன் பண்டிகை காலம் நெருங்குவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணித்துச் செயல்படுத்த வேண்டும். 

கொரோனா திருவிழாக்கள், கூட்டங்கள் போன்றவற்றால் அதிகரிக்கலாம் என்பதால் கட்டுப்பாடுகள் அவசியம் ஆகிறது.  மேலும். மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.  கொரோனா தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க வேண்டும். ”

ன அறிவுறுத்தப்பட்டுள்ளது.