டில்லி

ரிந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தை நிலை நிறுத்த கடுமையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதாகப் பல பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அரசு தரப்பில் அதை மறுத்த போதிலும் ஆளும் பாஜகவைச் சேர்ந்த சுப்ரமணியன் சுவாமி போன்றோர் பொருளாதார சரிவை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த மாதம் 7 ஆம் தேதி அன்று ரிசர்வ் வங்கியின்  கொள்கைக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் நேற்று வெளியாகி உள்ளது.

இந்த கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் குறைந்துள்ளதால் தற்போது நாட்டில் பொருளாதாரத்  தேவை அதிகரித்துள்ளது. இதைத் தவிர்க்க வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கும் நிலையில் உள்ளன. தற்போது அனைத்து தொழில்களிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதால் அதை வளர்ச்சியாக மாற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.

பொருளாதாரம் மேலும் சரியலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கான அறிகுறிகள் கடந்த சில மாதங்களாகத் தெரிய வருகின்றன. பல தனியார் நிறுவனங்கள் இதனால் பாதிக்கப் பட்டுள்ளது. எனவே உணவுப் பொருட்கள் மற்றும் எரி பொருட்களின் விலை உயர  வாய்ப்புள்ளது. இறக்குமதி வெகுவாக பாதிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனங்களின் பாதிப்பால் வங்கிகளில் கடன் பெறும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாகக் குறைந்து வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

ரெசெவெ வங்கியின் துணை ஆளுநர் பி பி காணுங்கோ இதே  கருத்தை ஆமோதித்துள்ளார். அத்துடன் அவர் வாகன விற்பனை சரிவு குறித்தும் வாகன உற்பத்தி தொழில் முடங்கி வருவது குறித்தும் கவலை தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் தலைமை இயக்குநர் மைக்கேல் பாத்ரா தற்போதுள்ள சூழ்நிலையில் பொருளாதாரம் மேலும் சரியாமல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்