கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் வன்முறை சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டிஎஸ்பி தலைமையில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், மாணவி எழுதிய கடிதம் உள்பட அனைத்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றபட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், போராட்டக்காரர்களை வீடியோ காட்சிகளை வைத்து பின்னர் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்றும் அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel