திருவாரூர்: திருவாரூர் அருகே வீட்டுக்குள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையை தெருநாய் உள்ளே வந்து கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் தெருநாய் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருநாயால் பலர் உயிரிழந்து வருவதும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. நாட்டிலேயே தெருநாயால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்த நிலையில்தான், தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தெருநாய்களை அகற்றி அதற்கான ஷெல்டர்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது தெருநாய்களுக்கு பொதுஇடங்களில் உணவு அளிக்கக்கூடாது என்று உத்தரவை உச்சநீதிமன்றம் மாற்றி எழுதி உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் திருவாரூர் அருகே வீட்டிற்குள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையை தெருநாய் ஒன்று வீட்டிற்குள் புகுந்து கடித்து குதறியுள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் சமையல் செய்துகொண்டிருந்த தாய் ஓடிவந்து நாயை அடித்து விரட்டிய நிலையில், குழந்தையை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அந்த குழந்தையின் தலை மற்றும் முகத்தில் நாய் கடித்து காயங்கள் இருந்ததாக மருத்துவமனை மருத்துவர் கள் தெரிவத்துள்ளனர். அந்த குழந்தைககு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், திருவாரூர் அருகே உள்ள கூத்தாநல்லூரில் உள்ள வீட்டிற்குள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தையை அந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய் ஒன்று வீட்டிற்குள் வந்து கடித்துச் சேதப்படுத்தியது தெரிய வந்தது. குழந்தையின் பெற்றோர், அபுதாஹீர் மற்றும் சுல்தான் பீவி. பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை மகன் அஜ்மல் பாட்ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சுல்தான் பீவி மற்றும் அவரது தாயார் மல்லிகா பீவி வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, நாய் பின் கதவு வழியாக வீட்டிற்குள் நுழைந்து குழந்தையைத் தாக்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. மல்லிகா பீவி நாயை விரட்ட முயன்றபோது, அவரையும் நாய் கடித்தது. பின்னர், சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அக்கம்பக்கத்தினர் நாயை விரட்டினர்.
படுகாயமடைந்த அஜ்மல் மற்றும் மல்லிகா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு குழந்தை குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது. “குழந்தை தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளது” என்று ஒரு மருத்துவர் கூறினார். குழந்தையின் தந்தை அபுதாஹீர் வெளிநாட்டில் வேலை செய்கிறார்.
தெருநாய் விவகாரம்: பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிக்க தடை உள்பட முக்கிய உத்தரவுகள்…