புதுடெல்லி: வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுவரும் பணி, பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் மே 7ம் தேதி முதல் துவங்கும் என்று உள்துறை அமைச்சக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட அதேநாளில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போதைய நிலையில், மொத்தம் 42000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசின் சார்பில், பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுவரும் பணி, ஏற்கனவே தொடங்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
சீனா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இந்தியர்கள், ஏர் இந்தியா சார்பில் தாய்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டனர். அதேசமயம், உலகெங்கிலும் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இன்னும் ஏராளமான இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இவர்களையும் அழைத்துவரும் பணி, மே மாதம் 7ம் தேதி முதல் துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.