சென்னை:
தமிழகத்தில் வரும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், யாருக்கு உங்கள் ஓட்டு? வரும், ஏப்., 18ல் குனிந்து கும்பிடாதீர்கள்; நிமிர்ந்து ஓட்டு போடுங்கள் என்று கமல் தெரிவித்துள்ளர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது
கமல் அந்த வீடியோவில் பேசியிருப்பதாவது,
முடிவு செய்து விட்டீர்களா; யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள்;
குடும்ப அரசியல் என்ற பெயரில், நாட்டையே குழிதோண்டி புதைத்தனரே, அவர்களுக்கா;
நம் உரிமைக்காக போராடும் போது அடித்து, துரத்தினரே அவர்களுக்கா?
நலத்திட்டம் என்ற பெயரில், நிலத்தையே நாசமாக்கி, நம் விவசாயிகளை அம்மணமாக்கி, நாட்டையே தலைகுனிய வைத்தனரே அவர்களுக்கா…
இல்லை. ‘கார்ப்பரேட்’ கைகூலியாக மாறி, பணத்திற்காக, நம் மக்களையே சுட்டு கொன்றனரே, அந்த அயோக்கிய அரசியல்வாதிகளுக்கா?
யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள்…
‘நீங்க என்னடா சொல்றது; எங்க அப்பா, அம்மா, யாருக்கு சொல்றாங்களோ, அவர்களுக்கு தான் ஓட்டு’ என, நீங்கள் சொல்வது கேட்கிறது.
சரிதான், ஆனால், எந்த அப்பா, அம்மா சொல்றதை கேட்க வேண்டும் என, நான் சொல்கிறேன். மொத்த அரசும் சேர்ந்து, ‘நீட்’ தேர்வுக்காக, ஒரு பெண்ணை கொன்றனரோ, அப்பெண்ணின் பெற்றோரை கேளுங்கள். அவர்கள், யாருக்கு ஓட்டு போடக் கூடாது என சொல்வர்.
நாட்டை ஆள தகுதியே இல்லாத, தலைமை உள்ள இந்த நாட்டில், அதை தட்டி கேட்கிற, உங்களில் ஒருவராக கேட்கிறேன்…
யாருக்கு உங்கள் ஓட்டு?
வரும், ஏப்., 18ல் குனிந்து கும்பிடாதீர்கள்;
நிமிர்ந்து ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.
கமல் பேசும் வீடியோ…