ரியோ:
ஒலிம்பிக் போட்டிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெரிய சேதம் இல்லை. பேருந்து கண்ணாடி உடைந்தது. எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டி நடந்துவருகிறது. நாட்டின் பொருளாதார சூழல் மிக மோசமாக இருக்கும் நிலையில், ஒலிம்பிக் போட்டிக்காக பெரும் பொருட் செலவு செய்வது தவறு என்று சில உள்நாட்டு அமைப்பினர் கருதுகிறார்கள். இவர்கள் ஒலிம்பிக் போட்டியை நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள். தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க சிறு தாக்குதல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன் ஒலிம்பிக் சுடர், கொண்டுவரப்பட்டபோது அதை அணைக்க முயன்றனர். இந்த நிலையில், ஒலிம்பிக் குறித்த செய்திகளை சேகரிக்க பத்திரிகையாளர்கள் சென்ற பேருந்து மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. யாருக்கும் காயம் இல்லை.
“ஒலிம்பிக் போட்டி நடப்பபதையடுத்து ரியோ நகரம் முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது. இருந்தாலும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துவருவது கவலை அளிக்கிறது” என்று விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.