சென்னை: “அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் குதிரை பேர நடவடிக்கையை தடுத்து நிறுத்துங்கள் என அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ண மூர்த்தி ஆளுநர் அர்நேகரிடம் மனு அளித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் சிலர், தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ள நிலையில், தவெகவின் குதிரை பேர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என அதிமுக தரப்பில் ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசியல் களத்தில் தினசரி பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஒருபுறம் ஆட்சி மீதான விமர்சனங்கள் எழும் நிலையில், மற்றொருபுறம் குதிரை பேர அரசியலும் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகஅரசியல் களம் பரபரப்பாகவே காணப்படுகிறது.
சமீபத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார் , சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்துவிட்டனர். இது அதிமுக தொண்டர்களிடையேஅதிர்தச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அதிமுக கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறி வருகிறது என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தவெகவின் குதிரை பேர அரசியல் குறித்து ஆளுநரிடம் மனு அளித்த அதிமுக மூத்த தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “குதிரை பேரத்தின் மூலமாக அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் நடவடிக்கையை தடுத்த நிறுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், ஆளுநருக்கு கொடுத்த புகார் மனுவை நாங்கள் கொடுத்துள்ளோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்என்றவர்,
தலைமை செயலகத்தையே தவெக கட்சி அலுவலகமாக மாற்றிவிட்டனர் ஆட்சியாளர்கள் என விமர்சித்தார்.
இதுதொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற குதிரை பேரத்தை தடுத்து நிறுத்துவதற்கு, தமிழக ஆளுநர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கொடுத்த மனுவினை, இன்று அதிமுக விவசாயப் பிரிவுச் செயலாளரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்றக் குழு கொறடாவும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ம. தனபால், ஆகியோர், தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]