IPL 2016 36-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ்வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
பஞ்சாப் அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் விஜய் மற்றும் ஸ்டானிஸ பொறுமை ஆட்டம் அட கிங்ஸ் அணியின் விஜய் ஆட்டம் இழந்தார். பின்பு வந்த தென் ஆப்ரிக்கா வீரர் அமலா சொற்ப ரன்கள் அவுட் ஆனார். ஸ்டானிஸ் மற்றும் சாஹா ஜோடி பஞ்சாப் அணி ஸ்கோர் அதிகப்படுத்த 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக ஸ்டோனிஸ் 52 ரன்களும், சாஹா 52 ரன்களும் எடுத்தனர்.
182 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பின்னர் டெல்லி அணி விளையாடியது. டி காக்கும், சாம்சனும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். டி காக் 52 ரன்களும், சாம்சன் 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நாயர் 23 ரன்கள் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பஞ்சாப் வீரர்கள் துடிப்பான ஆட்டம் காரணமாக டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டெல்லி அணி 9 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியை தழுவியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விஜய் தலைமையில் தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.
Patrikai.com official YouTube Channel