கீழடி:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தென்னை மரம் வைக்க குழி தோண்டப்பட்டது. அப்போது, அங்கு திட்டை இருந்தது தெரிய வந்தது. இது பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை என்று தொல்லியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் 2018ம் ஆண்டு வரை 4 கட்டங்களாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சி யின் போது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொண்மையான மனிதர்களின் நாகரீகம், கலாச்சாரம், பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளும் வகையில் அரிய வகை பொருட்களும் அவர்கள் பயன்படுத்திய தங்க ஆவரணங்கள், மண்பாண்ட பொருட்கள், சுடுமண் உருவம், சுடுமண் மனித முகம், தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு, சுடுமண் காதணி உள்ளிட்ட 13,638 தொண்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

தொடர்ந்து 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஜுன் 13ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த மாதத்துடன் நிறைவடைய இருந்த பணிகளை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொண்மையான மனிதர்கள் வாழ்ந்த பகுதியின் இரட்டை சுவர், நேர் சுவர், வட்டச் சுவர், நீர் வழிப்பாதை, தண்ணீர் தொட்டி , 7 அடுக்குகள் கொண்ட உறை கிணறு, மண்பானைகள், பாசிமணிகள், பிராமின் எழத்து பொறித்த மண் பான்டங்கள், மிகவும் தொன்மையான சுடுமண்னா லான பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள், உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பு, இரும்பு பொருட்கள், சுடுமண் சிற்பம், அணிகலன் உள்ளிட்ட  பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. விரைவில் 6வது கட்ட அகழ்வராய்ச்சி பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அகழாய்வு நடந்து முடிந்த பகுதிஅருகே  சில மீட்டர் தூரத்தில் தென்னை மரக்கன்றுகளை நடவு செய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கு மனிதர்கள் பதுங்கும் வகையில் கல்திட்டை அமைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து, நில உரிமையாளர் கதிரேசன் தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். கல் திட்டையை பார்வையிட்ட அதிகாரிகள், ஆதிமனிதர்கள் மழை, வெயில் காலங்களில் இருந்து தங்களை பாதுகாக்க பூமிக்கடியில் பாறைகளின் மறைவில் கல் திட்டை அமைத்து தங்கி இருந்திருந்தார்கள். அதுபோலவே இது காணப்படுகிறது.  ஆதிதமிழர்கள்இந்த கல்திட்டை அமைத்து இருக்கலாம் என்று கூறினர். மேலும்  6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.