சுவீடன்: பயங்கரவாதி தாக்குதல்! 4 பேர் பலி

Must read

ஸ்டாக்ஹோம்,

சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில், பரபரப்பான சாலைக்குள் பயங்கரவாதிகள் சரக்கு வாகனத்துடன் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.


இதில், சாலை ஓரமாக இருந்த வணிக வளாகத்திற்குள் வாகனம் புகுந்ததில் 4 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்தப்பட்ட உடன், வாகனத்தை ஓட்டி வந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவியில் பதிவான காட்சிகளின் உதவியுடன், சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களை சுவீடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் பீர் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமானது எனத் தெரிய வந்துள்ளது.

ஆனால், தங்களது வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றே இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளனர் என பீர் தயாரிக்கும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ஸ்வீடன் பிரதமர் ஸ்டெபோன் லோஃபன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article