கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கி இருப்பதுபோல் நடிகர் சூர்யா வின் ‘சூரரைப் போற்று’ படமும் முடங்கி இருக்கிறது.

கடந்த ஏப்ரல், மே மாதத்தில் ரிலீஸ் செய்யும் எண்ணத்துடன் விறுவிறுப் பாக வேலைபார்த்து வந்த படக்குழு கொரோனா ஊரடங்கால் படங்கள் ரிலீஸ் செய்ய முடியாது என்பதை அறிந்ததும் அப்செட் ஆகினர்.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரித்திருக்கிறது. சுதா கொங்கரா இப்படத்தை இயக்கி உள்ளார். ஹீரோயினாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

கொரோனா முடிந்ததும் படத்தை ரிலீஸ் செய்யும் வகையில் தற்போது இப்படத் துக்கு தணிக்கை செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு தணிக்கையில் யூ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

[youtube-feed feed=1]