கேப் டவுன்
பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தை ஒட்டி ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் பதவி விலகுகிறார்.
கிரிக்கெட் பந்தயத்தின் போது ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் பான்கிராப்ட் பந்தை சுரண்டி சேதப்படுத்தியது தொலைக்காட்சியில் தெரிய வர கடும் சர்ச்சை உண்டானது. பான்கிரோப்ட் மற்றும் ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டிவ் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் பதவி விலக வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டிகள் முடியும் வரை ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைத் தலைவர் டேவிட் வார்னர் ஆகியோர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். அணியின் புதிய தலைவராக டிம் பைனே அறிவிக்கபட்டுள்ளார்.