சிட்னி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், முதல் இன்னிங்ஸில் எழுச்சி கண்டு சதமடித்தார்.

கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய ஸ்மித், இந்தப் போட்டியில் சதமடித்துள்ளார். மூன்றாவது விக்கெட்டாக களமிறங்கிய லபுஷேன் 91 ரன்களில் ஆட்டமிழந்து, 9 ரன்களுக்கு சத வாய்ப்பை கோட்டைவிட்டார்.

ஆனால், வழக்கத்தை மீறி இந்தமுறை நான்காவது விக்கெட்டாக களமிறங்கிய ஸ்மித், தொடக்கம் முதலே தீர்க்கமாக ஆடினார். தற்போது 103 ரன்களை அடித்து நாட்அவுட்டாக நிற்கிறார்.

மேத்யூ வேட் 13 ரன்களில் ஆட்டமிழக்க, கேமரான் கிரீன் டக்அவுட் ஆனார். டிம் பெய்னே ஒரு ரன்னில் திருப்பி அனுப்பப்பட்டார். பேட் கம்மின்ஸும் டக்அவுட். தற்போது ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் களத்தில் உள்ளனர்.

தற்போதைய நிலையில், 7 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை எட்டியுள்ளது.

இந்தியா சார்பில், இந்தமுறை ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் சைனி தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். அஸ்வினுக்கு இதுவரை எந்த விக்கெட்டும் கிடைக்கவில்லை. அதன்விளைவே ஸ்மித்தின் சதம்.