தூத்துக்குடி :

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்படாது என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் இன்று கூறுகையில், ‘‘ஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர், மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பில்லை. அரசின் எண்ணமும் அதுதான். அதனால் பொதுமக்கள் அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 19 பெண்கள் உள்பட 102 பேர் காயமடைந்தனர். ஆண் போலீசார் 24,பேரும், பெண் போலீசார் 10 பேரும் காயமடைந்துள்ளனர்.

கலெக்டர் அலுவலகத்தில் ரூ.29 லட்சம் மதிப்பு சேதம் ஏற்பட்டுள்ளது. ரூ. 1 கோடி மதிப்பு வாகனங்கள் சேதமடைந்தன. 24 கார்கள் சேதமடைந்துள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் பஸ் இயக்கப்படவுள்ளது. மாநகரில் 180 பஸ்கள் ஓடுகிறது. மதுரையிலிருந்து காய்கறிகள் கொண்டு வந்து விநியோகம் செய்யப்படும். இதர பகுதிகளுக்கு பஸ் இயக்க நாளை முடிவு செய்யப்படும்.

[youtube-feed feed=1]