சென்னை:
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்றும் இதனால் மறைமுகமாக ஒரு லட்சம் மக்களின் வேலை வாய்ப்பு பறிபோய் விட்டது என்றும் ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றனம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றத்த்தின் தீர்ப்புக்கு தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். அரசியல் தலைவர்கள் பலர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மைச் செயல் அலுவலர் விடுத்துள்ள அறிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்யைில், “இந்தத் தீர்ப்பு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஆயிரக் கணக்கான சிறுசிறு வணிகங்கள், தொழில்முனைவோர், இந்த ஆலையின் இயக்கத்தைச் சார்ந்துள்ள சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் ஆகியோருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. நமது ஆலையின் இயக்கத்தின்போது பாதுகாப்பான, சூழல் சார்ந்த வலிமையான இயற்கை இருக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்புகிறோம்.