சென்னை:
ஸ்டெர்லைட் மூட அரசாணை வெளியிட்டது வெறும் கண்துடைப்பு என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஸ்டெர்லைட் ஆலை மூடல் என்ற அரசாணை வெறும் கண்துடைப்பு. இந்த விவகாரத்தில், அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவாக எடுத்திருக்க வேண்டும்.
13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், திமுக சார்பில் வழக்கு தொடரப்படும். ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சியில் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கேள்வி எழுப்புவோம்’’ என்றார்.
[youtube-feed feed=1]