சென்னை:

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜூன் 27க்கு ஒத்தி வைப்பதாக சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது.

உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட நிலையில், ஆலையை திறக்க அனுமதிக்க கோரி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா நிறுவனம் தரப்பில்சென்னை உயர்நீதி மன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நடைபெற்ற கடந்தகால விசாரணைகளின்போது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது,  ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சில தொழிலாளர்களும், எதிராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இசக்கி துரை உள்பட பலர் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை  27ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.