
சென்னை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இன்று நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் காரணமாக போலீசார் துப்பாக்கி சூடு, தடியடி, கல்வீச்சு போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றன.
இதில் 2 பேர் போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியானதால் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் டி.ஜி.பி உள்பட காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
[youtube-feed feed=1]