சென்னை:
சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம் இன்று முதல் டிச.4-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்து நகர்ப்புற சமுதாய மையங்களில், காலை 8:00 முதல் மாலை 3:00 மணி வரை நடக்கிறது.
இது சம்பந்தமான விழிப்புணர்வு வாகனத்தை, ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம்களில், கத்தி உபயோகப்படுத்தாலும், தையல், தழும்பு இல்லாமல் புதிய எளிய முறையில் செய்யப்படுவதால், மருத்துவமனைகளில் தங்க வேண்டிய அவசியமில்லை.
நவீன கருத்தடை செய்து கொள்ளும் நபர்களுக்கு அரசின் 1,100 ரூபாய் ஊக்கத்தொகை, ஊக்குவித்து அழைத்து வருவோருக்கு 200 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.