சென்னை: எண்ணூர் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள் நடத்தப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர்கள் பொன்முடி, எவ வேலு பதில் அளித்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்து, மானிய கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த வாரம் பல்வேறு துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்ற நிலையில், சனி, ஞாயிறு 2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது.
இன்றை அமர்வில், வீட்டுவசதி -நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது. முன்னதாக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது, உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அப்போது, உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் எ.வ.வேலு, செய்யாறு சிப்காட் – எண்ணூர் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இச்சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் பட்சத்தில், சிப்காட்டில் உற்பத்தி பொருட்கள் எளிதாக துறைமுகம் கொண்டு செல்லப்படும் என கூறினார்.
அதுபோல மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டின் பசுமை பரப்பை 33 சதவீதமாக உயர்த்த பசுமை தமிழ்நாடு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறியதுடன், கடந்த 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.