சென்னை,
ரெயில்வே வார விழாவையொட்டி இன்று சென்னை எழும்பூர் முதல் கிண்டி வரை நீராவி எஞ்சினை இயக்குகிறது.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 10–ந்தேதி முதல் 16–ந்தேதி வரை ரெயில்வே வார விழா கொண்டா டப்பட்டு வருகிறது.
இந்தியாவில் முதன்முதலாக கடந்த 1853–ம் ஆண்டு மும்பை – தானே இடையே முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இதற்கு சுல்தான் சாகிப் என்று பெயரிடப்பட்டு இருந்தது.
இதனை நினைவுகூரும் வகையில் கொண்டா டப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டும் ரெயில்வே வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூர் – கிண்டி இடையே இன்று (புதன்கிழமை) நீராவி என்ஜின் இயக்கப்படுகிறது.
இந்த விழாவில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் கலந்துகொள்கிறார்.
இதற்காக நீராவி என்ஜின் பழுது பார்க்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.