டெல்லி:

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏடிஜிபிடம் ஒப்படை[யுங்கள் என்று ஓய்வுபெற்ற சிலைக் கடத்தல் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

சிலை கடத்தல், திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஐ.ஜி. பொன்மாணிக்க வேலை நியமனம் செய்திருந்தது. அவரது பணிக்காலம் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், சிலைக்கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க தமிழகஅரசு உத்தரவிட்டது.

அனால், பொன்மாணிக்க வேல் ஆவணங்களை, ஏடிஜிபியிடம் ஒப்படைக்க முடியாது என்று கூறிய நிலையில், தமிழகஅரசு  மீது பொன்மாணிக்க வேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். மேலும் தனது பணி காலத்தை நீட்டிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்திலும்  மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து,  சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏடிஜி.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசு மீது பொன் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டிற்கு இடைக்கால தடை பிறப்பித்தது.

மேலும் பொன் மாணிக்கவேலின் பணியை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் மனு மீது, எதற்காக பணி நீட்டிக்க வேண்டும் என விளக்கம் கேட்டு பொன் மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி, ராஜேந்திரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

தொடர்ந்து, பொன் மாணிக்கவேல் பதவியை நீட்டிக்க கோரிய டிராபிக் ராமசாமியின் மனுவை விசாரிக்க முடியாது என தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், தமிழக அரசு மீது பொன்மாணிக் கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய அவசியம் என்ன எ கேள்வி எழுப்பி உள்ளது.

இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொன்.மாணிக்கவேல் இனியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக தொடரக்கூடாது. அவருக்கு பதிலாக நாங்களே வேறு ஒரு அதிகாரியை நியமிக்கிறோம் என வாதிட்டப்பட்டது.

இதற்கு பொன் மாணிக்கவேல் தரப்பில், சிலைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு கிடையாது. சென்னை ஐகோர்ட்டிற்கு அக்கறை இருந்ததால் என்னை நியமித்து செயல்பாடுகளை கண்காணித்தது என பதில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு வாதங்கள் நடைபெற்றன.