சென்னை; உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜூலை 9ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றுமுதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு, உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊரக உள்ளாட்சியில் 498 பதவிகள், நகர்ப்புறத்தில், 12 பதவிகள் என, 510 பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இதையடுத்து தேர்தல் நடக்கும் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து அந்த பகுதிகளில் மாவட்ட அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் நடக்கும். வேட்புமனு விவரம், உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
தேர்தலையொட்டி, வார்டு வாரியாக, வாக்காளர் பட்டியலும் தயார்நிலையில் உள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர் என பலர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேட்புமனுத் தாக்கல் இன்று (ஜூன் 20) தொடங்கி உள்ளது.
வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 27 ந்தேதி
வேட்புமனு பரிசிலனை ஜூன் 28ந்தேதி
வேட்புமனு வாபஸ் பெறும் நாள் ஜூன் 30ந்தேதி
வாக்குப்பதிவு நடைபெறும் நாள் ஜூலை 9ந்தேதி.
வாக்குப்பதிவு நேரம் காலை, 7:00 முதல், மாலை, 6:00 மணி வரை.
வாக்கு எண்ணிக்கை ஜூலை 12ம் தேதி நடைபெறும்.