நெட்டிசன்:
மாநில சுயாட்சியை பறித்தவர் அம்பேத்கர்தான் என்கிற கருத்தில் மானாமதுரை மருது அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு:
அமெரிக்க, இங்கிலாந்து சட்டத்திட்டங்களின் படி உருவாக்கப்பட்டது இந்திய சட்டம். அந்த இரு நாடுகளில் மாநிலங்கள் தங்கள் உரிமையை காக்க சட்டங்கள் இயற்றிக்கொள்ளலாம். அதை மைய அரசு ஏற்று கொள்ள வேண்டும்.
ஆனால் அவ்விரு நாடுகளை ஒட்டி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கார் அந்த சட்டத்தில் ஒரு திருத்தத்தை கொண்டு வந்தார்.
அதாவது, “மாநிலங்களுக்கு சுயாட்சி தேவையில்லை. அவை பிரிவினைக்கு வழி வகுக்கும். இந்திய இறையாண்மைக்கு உட்பட்டே மாகாணங்கள் இருக்கவேண்டும். அவர்களுக்கு சுய உரிமை கொடுத்தால் நாடு துண்டு துண்டாக போகும். அவை நிகழாமல் தடுக்கும் நிலை என் கையில் உள்ளது” என்றார்.
அதையொட்டிய சட்டத்தை அமைத்தார். விளைவு… இங்கே மாநிலங்களுக்கு சுயாட்சி இல்லதா நிலை!
இன்று இந்தியாவில் மாநில சுயாட்சி காக்க போராடுகிறோம் என்றால் அதற்கு காரணம் அண்ணல் அம்பேத்கார்.
அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராடிய தலைவர் என்பதால், மாநில சுயாட்சியை பறித்தவர் என்ற நிலையை மறந்து அவரை போற்றுகிறோம்.