நியூயார்க்:

கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2020 ஆம் ஆண்டின் இறுதி இரண்டு வாரங்களில் மிகவும் குறைவாக இருந்து வந்தாலும், இந்த ஆண்டின் முதல் இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்தமாக மேல் நோக்கி சென்றிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அவசர கால திட்ட நிர்வாக இயக்குனர் மைக் ரியான் தெரிவித்துள்ளதாவது: கடந்த வாரம் மட்டும் உலக அளவில் ஐந்து மில்லியன் கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார், அதுமட்டுமல்லாமல் கோரொனா காரணமாக புதிய இறப்புகளின் எண்ணிக்கையும் இதேபோன்று போக்கை காட்டி உள்ளது, கடந்த வாரம் மட்டும் 93,000 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், மேலும் இந்த எண்ணிக்கை விரைவில் வாரத்திற்கு 1,00,000 மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மைக் ரியானின் கூற்றுப்படி, கொரோனா தொற்று காரணமாக இறப்பவர்களில் கிட்டத்தட்ட 84% 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர் என்றும், 16%  25 முதல் 64 வயது உட்பட்டவர்களாக இருக்கின்றனர் என்பதையும் ரியான் தெரிவித்துள்ளார், ஒரு நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தால் இறப்பு விகிதமும் அதிகமாக இருக்கும் எனவும், ஏற்கனவே பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், கிட்டத்தட்ட அறுபத்து நான்கு தடுப்பூசிகள் மனித பரிசோதனையில் உள்ளதாகவும் மைக் ரியான் தெரிவித்துள்ளார்.