சேலம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள், தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் வகையில்  போச்சம்பள்ளியில் ஞாயிறன்று வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்குபெற்று தேவையான வழிகாட்டுதல்களை பெறலாம்.

நேட்டிவ் லீடு அமைப்பின் தொழில்முனைவோர் தேடல் நிகழ்ச்சி போச்சம்பள்ளியில் வரும் ஞாயிற்றுக்கிழமை  நடைபெறுகிறது.

மதுரையைச் சேர்ந்த Nativelead அமைப்புடன் இணைந்து, போச்சம்பள்ளி தேடல் சமூக சேவை அமைபபு வரும் 24ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி அளவில்  போச்சம்பள்ளியில் தொழில் முனைவோர் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்துகிறது.

போச்சம்பள்ளி திருப்பத்தூர் மெயின்ரோட்டில் உள்ள  ஜே மார்ட் முதல்மாடியில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  Nativelead நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சிவராஜ் ராமநாதன் (Shivaraja Ramanathan) கலந்துகொண்டு உரையாற்றுகிறார். மேலும் துறை சார் வல்லுநர்களும் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில், தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு தொழில் தொடங்குவதற்கு தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் பெறலாம்.

உங்கள் தொழிலுக்கான முறையான திட்டம் இருந்தால் உங்களுக்கும் முதலீடு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதுபோல, ஏற்கனவே நீங்கள் தொழில் செய்திருந்தால், அந்த தொழிலை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் தேவையான ஆலோசனைகளை பெறவும் இந்த நிகழ்ச்சி உறுதுணையாக இருக்கும்.

புதிதாக தொழில் தொடங்க வேண்டுமானால்,  நீங்கள் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யவேண்டாம் என்பது குறித்து, உங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து, உங்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் பெறலாம்.

அதனால் தொழில்முனைவோர்களே, மறக்காமல் நிகழ்ச்சிக்கு வந்துடுங்க உங்கள் தொழிலுக்கு முதலீடடோ அல்லது வழிகாடுதல்களொ நீங்கள் பெறலாம்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் தொழில்முனைவோர்கள்  https://Bit.ly/Thedal2021 என்ற தளத்திற்கு சென்று பதிவு செய்துகொள்ளுங்கள்.

மேலும் விபரங்களுக்கு 9943094945 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.