
உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது.
சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம் முழுவதும் இப்பொழுது பற்றி பரவியுள்ளது இந்த கொடிய வைரஸ்.
ஏழை, பணக்காரன் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் சுழட்டி அடிக்கும் கொரோனா வைரஸிற்கு உலகின் பல முன்னணி நடிகர்கள் பலியாகியுள்ளனர் .
சமீபத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 70 வயதுடைய பிரபல நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அந்தவரிசையில் ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்த நடிகர் ஆண்ட்ரூ ஜாக் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் மரணமடைந்துள்ளார். 76 வயதாகும் இவர் நடிப்பு பயிற்சியாளராகவும் பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]