
தூத்துக்குடி:
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி 12 பேரை கொன்றுள்ள நிலையிலும், மக்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
மக்களின் போராட்டத்தை ஒடுக்க துணைராணுவத்தினரை தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அழைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தமிழக அரசின் செயலற்ற தன்மையை காட்டுவதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி கலவரம், துப்பாக்கி சூடு தொடர்பாக இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில், அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை ஒடுக்க துணை ராணுவத்தை அனுப்ப தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
துணை ராணுவத்தை அனுப்ப மத்திய அரசுக்கு தலைமைச் செயலர் கிரிஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்க முடியாமல் தமிழ்நாடு போலீஸ் திணறிவருவது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்க துணை ராணுவத்தை அனுப்ப தமிழக அரசு செயலிழந்து இருப்பதை காட்டுகிறது.
தூத்துக்குடியில் மக்களை ஒடுக்க போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி பலரை கொன்றுள்ள நிலையில், மக்கள் சாரை சாரையாக வந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மீண்டும் மீண்டும் பிரச்சினைகள் உருவாகி வருகிறது.
மக்களின் போராட்டத்தை அடக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதன் காரணமாக தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை ஒடுக்க துணை ராணுவத்தை அனுப்ப தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
துணை ராணுவத்தை அனுப்ப மத்திய அரசுக்கு தலைமைச் செயலர் கிரிஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் காரணமாக தமிழக அரசு செயலிழந்து போய் இருப்பது தெரிய வந்துள்ளது. மக்கள் போராட்டத்தை மக்களுடன் பேசி கட்டுப்படுத்த தெரியாத தமிழக அரசு ஆளத்தகுதியற்றது என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
[youtube-feed feed=1]