சென்னை:
மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சிலர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில்,அதை எதிர்த்து
‘மெட்ரோ ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மெட்ரோ ரயிலின் பெரும்பாலான சேவைகள் முடங்கி உள்ளது.
இந்த நிலையில்,வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் மெட்ரோ ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நிலையில் பேச்சு நடைபெற்று வருகிறது.
மெட்ரோ நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர் சங்கம் அமைக்க முற்பட்டதாக கூறி 8 மெட்ரோ ஊழியர்கள் கடந்த டிசம்பர் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, நேற்று முதல் கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் 250க்கும் மேற்பட்ட மெட்ரோ ஊழியர்கள் குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு மெட்ரோ ரயில் சேவைகள் முடங்கி உள்ளது.
இந்த நிலையில், பாரிமுனையில் உள்ள தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜானகி ராமனுடன், மெட்ரோ நிர்வாக தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தரப்பினரும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெட்ரோ ஊழியர்கள் சார்பில் சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். பேச்சு வார்த்தை தொடர்ந்து வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் பிரச்னை தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. 8பேர் பணிநீக்கத்தை ரத்து செய்து அவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும், மெட்ரோ நிர்வாகம் அதற்கு சம்மதிக்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் சில ரயில்கள் தற்காலிக பணியாளர்களை கொண்டு இயக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பிராட்வே மெட்ரோ ரயில் நிலையத்தில், மெட்ரோ ஊழியர் ஒருவர் தவறுதலாக தீவிபத்துக்கான பட்டனை அழுத்தி விட்டதால் பயணிகள் அலறியடித்து வெளியேறினர். இதனால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது.