
சென்னை,
திமுக இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார்.
நடநது முடிந்த திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட் டதை தொடர்ந்து, தனது இளைஞர் அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
இன்று அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை பொதுச்செயலாளர் அன்பழகனிடம் சமர்ப்பித்தார்.
இதைதொடர்ந்து அவர் இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மு.க.ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணி தலைவராக 1980ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கடந்த 36 ஆண்டுகளாக அவர் அந்த பதவியில் வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel