சேலம்: தவெக பொதுக்கூட்டம் இன்று அக்கட்சிதலைவர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய விஜய், திமுக அரசை கடுமையாக சாடினார். ஸ்டாலின் ஆட்சியோ அவுட்ஆஃப் கண்ட்ரோல்தான் என்று கூறினார்.

சேலத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டத்துக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுடன் நடந்து வருகிறது. காலை முதலே விஜயைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தார்கள். ஐந்தாயிரத்துக்கும் குறைவானவர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டது. சரியான நேரத்துக்குள் விஜய் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகை தந்த நிலையில், 12.30 மணிக்குள் கூட்டம் தொடங்கியது. சேலம் தவெக நிர்வாகிகள் பேசிய நிலையில் விஜய் பேசத் தொடங்கினார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது தவெக தொண்டர்கள் விஜய் பேச்சைக் கேட்டனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று, தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுடன் நடைபெற்று முடிந்துள்ளது. ஐந்து ஆயிரத்துக்கும் குறைவானவர்களே கூட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தவெக தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று பகல் 12.30 மணிக்குத் தொடங்கியது. சேலம் மாவட்ட நிர்வாகிகள் பேசியதைத் தொடர்ந்து கட்சித் தலைவர் விஜய் பேசினார்.
= ‘மக்களுக்காக நான் அரசியலுக்கு வந்தது தவறா?
= தமிழ்நாடு உங்களுக்கு மாநிலம் ஆனால் எனக்கு வீடு
= நான் சொன்ன ஆட்சியில் பங்கு என்ற பாம் ஒவ்வொரு கூட்டணியிலும் வெடிக்கிறது
= அடுத்தவர்கள் ஆரம்பித்த கட்சியில் இருந்துகொண்டு அரசியல் செய்கிறார்கள்
= உங்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன்
= ஆட்சிக்கு வரும்போதும் போகும்போதும் பொய்
= ஸ்டாலின் ஆட்சியே அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்!
= தமிழ்நாட்டோட முதல் படை வீரனா, பாதுகாவலனா நிற்பேன்

சேலத்தில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் விஜய், என்னை வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்களே, என் வீடு எது என்று தெரியுமா? என்று கேட்டு தன்னுடைய பேச்சைத் தொடங்கியிருக்கிறார். தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று பகல் 12.30 மணிக்குத் தொடங்கியது. சேலம் மாவட்ட நிர்வாகிகள் பேசியதைத் தொடர்ந்து கட்சித் தலைவர் விஜய் பேசத் தொடங்கினார். அவர் பேசுகையில், இந்த உத்வேகம்தான் ஒரு சக்தியைக் கொடுக்கும். அது மட்டுமல்ல, மற்றவர்கள் நம்மை ஏளனமாகப் பார்க்கும் நேரத்தில், நம்மைக் குறைவாக எடைபோடும் நேரத்தில் தான் உத்வேகம் பிறக்கும்.
நாம் யார் என்று காட்ட வேண்டும் என்ற உத்வேகம் வரும். எந்த விஷயத்தில் நம்மை கிண்டலும் கேலியுமாகப் பேசினார்களோ அந்த விஷயத்தில் நம்மை நேர்மறையாக மாற்றுவதற்கு உத்வேகம் வரும். அங்கிருந்துதான் அந்த சக்தி உருவாகிறது என்று பேசினார். என்னைப் பற்றி பேசிய அந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கலாமா? என்று கூறியவர்,
ஏ, விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள். அவர்களுக்கு என் வீடு எதுன்னு தெரியுமா? எங்க இருக்குன்னு தெரியுமா? என்னை சீண்டிப் பார்ப்பதாக நினைத்து கேலியும் கிண்டலுமாக பேசுபவர்களுக்குச் சொல்கிறேன். தமிழ்நாடு உங்களுக்கு மாநிலமாக இருக்கலாம், ஆனால் தமிழ்நாடுதான் என் வீடு என் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியுமா? 8 கோடி பேர் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடும் என் வீடு, ஒட்டுமொத்த தமிழக மக்களும் என் சொந்தம்.
தமிழ்நாட்டின் முதல் படை வீரனாக அவர்கள் கூட நிற்க வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். அந்த எட்டு கோடிப் பேருக்கும் எல்லாமுமாக நிற்கப் போவது இந்த விஜய் தான். எல்லாம் கொடுக்கப் போவதும் நான்தான். இன்று உங்களிடம் வாக்கு கேட்டு மட்டும் வரவில்லை. ஆனா, இன்று உங்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன். உங்களுக்காக நீதி கேட்கத்தான் வந்தேன். ஆனால் உங்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன். இந்த விஜய் என்ன தப்பு செய்தேன். மக்களுக்காக நான் அரசியலுக்கு வந்தது தவறா?
எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு அரசியலுக்கு வந்தது தவறா? பொதுக்கூட்டம் நடத்த மற்றவர்களுக்கு அனுமதி கொடுப்பார்கள். மற்ற கட்சிகளுக்கு கொடுப்பார்கள். ஆனால் எனக்கு கூட்டம் நடத்த அனுமதிக்க மாட்டார்கள், கொடுக்கவும் விட மாட்டார்கள். இதில் என்ன நியாயம். மக்களை நான் சந்திக்கவும், மக்கள் என்னை சந்திக்கவும் விட மாட்டார்கள் என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், மற்றவர்களுக்கு கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறை இருக்கும். எனக்கு மட்டும் ஸ்டாலின் சார் வழிகாட்டு நெறிமுறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது என்று கூறினார்.
இளம் தலைமுயினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலாசாரம் மாற வேண்டும். பணம் கொடுத்தால் நீங்கள் ஓட்டு போட்டு விடுவீர்களா? நீங்கள் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
‘எங்கள் ஓட்டு எங்கள் உரிமை; எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது; எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்குதான்; யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்’
இனி நீங்கள் கொள்ளையடித்த பணம் எல்லாம் குப்பையில்தான் போட வேண்டும். மக்களும் ஊழல் ஆட்சியை குப்பையில் போட போகிறார்கள்.
இளம் தலைமுறையினர் தங்கள் வீட்டில் உள்ளவர்களை விசில் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொல்லுங்கள். விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வையுங்கள்.
நாங்கள் எந்த கட்சியை ஒழிக்கவோ அழிக்கவோ அரசியலுக்கு வரவில்லை. எந்த கட்சியின் மீதும் தனிப்பட்ட வன்மமோ கோபமோ இல்லை, வெறுப்பு அரசியல் செய்ய நான் அரசியலுக்கு வரவில்லை. அரசியல்ரீதியாக எங்களுக்கு எதிரி யார் என்று அறிவித்து மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்தவே நாங்கள் அரசியலுக்கு வந்திருக்கிறோம்.
அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று கேட்கிறார்களே… அதிகாரத்தை வைத்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்ததைத் தாண்டி வேறு எதுவும் அனுபவம் இவர்களுக்கு இருக்கிறதா? ‘
அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் இருந்துகொண்டு அரசியல் செய்யும் இவர்களுக்கு எல்லாம் ஒரு சவால்… இவர்களால் சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் வாக்கு வாங்க திராணி இருக்கிறதா? எங்களுக்கு அனுபவம் இல்லைதான், கொள்ளையடிப்பதில் எங்களுக்கு அனுபவம் இல்லைதான்”

தொடர்ந்து பேசியவர், டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று ஸ்டாலின் அடிக்கடி சொல்வார். அவர் எதிலெல்லாம் அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று நான் கூறுகிறேன். ‘
சட்டம் – ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்கள் வேலைவாய்ப்பு என அவரது ஆட்சியே அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்.
இந்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று கூறினார்.
மக்கள் உண்மையாக சந்தோசமாக இருக்கிறார்கள் என்றால், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டங்கள் எல்லாம் ஏன் நடக்கிறது?
எனக்கு தெரிந்து மக்கள் சந்தோசமாக இருந்தால் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். ஆனால், உங்கள் ஆட்சியில் போராட்டம் நடத்தி கொண்டாடுகிறார்கள்.
மக்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லை. ஆட்சிக்கு வரும்போது பொய் கூறினீர்கள். இப்போது போகும்போதும் பொய் கூறுகிறீர்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் 202-ல் 70% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்றார்கள். கடந்தாண்டு 90% என்றார்கள். தற்போது 80% நிறைவேற்றிவிட்டோம் என்கிறார்கள். தேர்தல் நெருங்கும்போது படிப்படியாக குறைந்து 20% ஆக நிற்கும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கொட்டிக்கிடக்கிறது என்கிறார்கள்.
அண்ணா பல்கலை., கோவை கல்லூரி பெண்களுக்கு ஏன் அப்படி நடந்தது. போக்சோ சட்டத்தில் அதிக வழக்குகள் பதிவாவது ஏன்?
போதைப்பொருள் புழக்கம் கடுமையாக அதிகரித்து வருகின்றது.
தமிழகத்துக்கு முதலில் முழுநேர டிஜிபியை நியமனம் செய்யுங்கள். அதன்பிறகாவது சட்டம் – ஒழுங்கு கட்டுக்குள் வருகிறாதா என்பதை பார்ப்போம்”
தமிழ்நாட்டோட முதல் படை வீரனா.. தமிழ்நாட்டோட முதல் பாதுகாவலனா மக்களுடன் நிற்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள்.
டிஎன்பிஎஸ்சி தேர்வை அறிவித்துவிட்டு உடனே ரத்து செய்துவிட்டார்கள். இது உலகத்துக்கே தெரியும். தேர்வை ரத்து செய்துவிட்டு தொழில்நுட்பக் கோளாறு என்று சொல்லிவிட்டு கடந்து போய்விட்டார்கள். இத்தனை ஆண்டுகளாக இரவு – பகலாக படித்து கஷ்டப்பட்டு எப்படியாவது அந்த வேலை நமக்கு கிடைக்காதா என்று எதிர்பார்த்திருந்த நமது தம்பி, தங்கைகள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள்? அதை யாராவது யோசித்துப் பார்த்தீர்களா?
ஒரு தேர்வை ஒழுங்காக நடத்தத் தெரியவில்லை. இதில் உலக நாடுகளுடன் போட்டி போடுகிறார்களாம். நீங்கள் உங்கள் பெற்றோரிடம் கூறுங்கள், அனைவரும் தைரியமாக இருங்கள் என்று கூறுங்கள், வரப்போவது உங்கள் ஆட்சி, நம்முடைய ஆட்சி. அதனால் சமூக நீதிக்கான ஒரு நல்ல ஆட்சியை அமைப்போம். இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை மனதில் வைத்துக்கொண்டு வெளிப்படையாக ஒரு தீர்வைக் காணுவோம்

. நான் விக்ரவாண்டி மாநாட்டில் பேசும்போது ஒன்று சொன்னேன். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு. அந்த அரசியல் வெடிகுண்டு இப்போது அனைத்து கூட்டணியிலும் வெடித்துக்கொண்டு இருக்கிறது. தாறுமாறாக வெடித்துக்கொண்டிருக்கிறது, மு.க. ஸ்டாலின் பதறுகிறார், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு எல்லாம் தமிழ்நாட்டில் ஒத்துவராது என்று கூறுகிறார். அவர்களைப் பொருத்தவரைக்கும் ஜெயிப்பதற்கு மட்டும்தான் கூட்டணி. மற்ற அனைத்துக்கும் அவர்கள் தனி அணி. அவர்கள் மட்டுமே ஒரே அணி. வெல்வோம் ஒன்றாக, ஆனால் வரும் செல்வத்தை எல்லாம் பார்ப்போம் தனியாக என்று இருக்கிறார்கள். அதுதான் சீக்ரெட். புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். நம்முடன் நம் மக்கள் இருக்கிறார்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” .
இனி நேரடியாக தேர்தல் பற்றி பேசுவோம், விஜய் என்ன இவர்களைப் பற்றி பேசுகிறார், இவர்களைப் பற்றி பேசுவதில்லை என்கிறார்கள். இது யாருக்கான தேர்தல். பேரவைக்கான தேர்தல். இங்கு யார் ஆட்சியில் இருக்கிறார்கள். பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்கள் விரோத ஆட்சி நடத்துபவர்கள். அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். அவர்களை அகற்ற வேண்டும் என்றால், நாம் யாரை எதிர்க்க வேண்டும்? ஏற்கனவே மக்கள் பல முறை நீக்கியவர்களை நாம் ஏன் எதிர்க்க வேண்டும். நம்முடைய கவனம், இலக்கு, திமுக என்றபோது, இருட்டுக்குக்குள் ஏன் கல் எறிய வேண்டும்? மக்களை விரும்பும் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் வேண்டுமா? அவ்வளவுதான் இந்த தேர்தல். இதற்கு நடுவில் வேறு யாருமே கிடையாது என்று விஜய் பேசியுள்ளார்.
[youtube-feed feed=1]