சென்னை,

ரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

திமுக சார்பில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது,

அதிமுக ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவே ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளார். ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் பிராதன நோக்கம். அதற்காகவே அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக எதிர்க்கட்சிகளை கூட்டி ஆலோசிக்கிறார். ஆனால், ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் நடக்காது  என்றார்.

தமிழக சட்டப்பேரவையில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற அமைச்சர்,  2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது , அதுபோல  2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக மீண்டும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.