சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்த வழக்கை சிபிஐக்கு மாற்ற இந்திய தேர்தல் ஆணையத்திடம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கோர வேண்டும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா: காவல்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் ஆணையாளர் ராஜேஷ் லக்கானி கூறியிருந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவரது தொகுதியான ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது வாக்காளர்களுக்கு கட்சியினர் பணம் பட்டுவாடா செய்தது உறுதியானால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் கமிஷன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டியது, மாநில காவல்துறைதான் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறி இருந்தார்.
இந்நிலையில், திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின், இதுகுறித்த வழக்கை சிபிஐக்கு மாற்ற இந்திய தேர்தல் ஆணையத்திடம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கோர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.