சென்னை: கலைஞரைப்போல ஸ்டாலினும் உலக தமிழர் இதயங்களில் இடம்பிடிப்பார் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது,
முதல்வராக பதவியேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன், அதிமுக ஆட்சியால், பின்தங்கியுள்ள தமிழகத்தை முன்னெடுத்து சென்று தமிழ் மக்களுக்கு அனைத்து நன்மைகளையும் செய்வார் என்று நம்புவதாகவும், சிறந்த முதல்வராக செயல்படுவது மட்டுமின்றி, கலைஞரை போல் உலக தமிழர் இதயங்களில் முக ஸ்டாலினும் இடம்பிடிப்பார் என்றும் கூறினார்.
Patrikai.com official YouTube Channel