சென்னை,
கடந்த 18 நாட்களாக டில்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க டில்லி செல்கிறார் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின்
விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள் கடந்த 18 நாட்களாகப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
பல்வேறு கட்சி அரசியல் தலைவர்கள் சந்தித்துப் பேசி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி போராடும் விவசாயிகளுடன் அமர்ந்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். மேலும், திமுக எம்.பி. கனிமொழியும் இன்று விவசாயிகளை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று டில்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த ஸ்டாலின் இன்று இரவு டில்லி செல்கிறார்.
நாளை காலை 9.30 மணிக்கு அவர் போராடி வரும் விவசாயிகளை ஜந்தர் மந்திரில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கிறார்.
அதைத்தொடர்ந்து, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்து, ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்தும் பேசுவார் எனத் தெரிகிறது.