சென்னை,
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவரு மான மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அப்போது, ஓகி புயல் காரணமாக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், மீட்பு நடவடிக்கையை துரித படுத்த மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்ள வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.
இன்று நண்பகல் 12.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆளுநர் பன்வாரிலால் பதவியேற்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என ஆட்சேபம் தெரிவித்து தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில் இன்று ஆளுநரை சந்திக்கிறார்.